பெண் கடத்தல்?

திருத்தணி: திருவாலங்காடு அடுத்த வீரராகவபுரம் ஊராட்சி புளியமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு(35). விவசாயி. இவரது மனைவி சித்ரா(32). இவர்களுக்கு சுகந்தி(9) என்ற மகளும், பாஸ்கர்(8) என்கிற மகனும் உள்ளனர். கடந்த 26ம் தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்கச்சென்ற சித்ரா வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ஸ்ரீராமுலு அக்கம்பக்கம் உறவினர்கள் வீட்டிலும் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் சித்ராவை யாராவது கடத்தி விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர். 

Related Stories: