இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு

திருவள்ளூர்: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. திருவள்ளூர் ஒன்றியம் புட்லூர் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் ஊராட்சி தலைவர் லோகாம்பாள் கண்ணதாசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரும், ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ரா.தாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. புட்லூர் ஊராட்சியில் அனைத்து இல்லங்களையும் தேடிச்சென்று நாடகக் கலையின் மூலம் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

More