உதயநிதி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், உதயநிதி பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திருக்கழுக்குன்றத்தில் உள்ள சுப்பையா சுவாமிகள் மடத்தில் ஏழை, எளியோர் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. சதுரங்கப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியும், அமிஞ்சிகரை, வழுவதூர், வல்லிபுரம், லட்டூர் ஆகிய இடங்களில் அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு வேட்டி - சேலை என பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதேபோல், நேற்று திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி, ஒன்றிய திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், ஒன்றிய பிரதிநிதிகள் செல்வக்குமார், கயல் மாரிமுத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரிதினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தனசேகரன், ஜெயபால், சகாதேவன் நிர்வாகிகள் சுகுமாரன், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories:

More