பீகார் நீதிமன்றம் புதிய சாதனை: பாலியல் வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

அராரியா: பாலியல் வழக்கில் ஒரே நாளில் அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பீகார் நீதிமன்றம் புதிய சாதனை படைத்துள்ளது. பீகாரில் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 22ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அடுத்த நாள் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கடந்த மாதம் 4ம் தேதி இந்த வழக்கு பீகாரின் அராரியா மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சசி காந்த் ராய், ஒரே நாளில் வழக்கை முடித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்கு ரூ.7 லட்சமும் வழங்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு உத்தரவு நகல் கடந்த 26ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிக விரைவாக தீர்ப்பளிக்கப்பட்ட பாலியல் வழக்கு என்ற சாதனையை பீகார் நீதிமன்றம் படைத்துள்ளது.

Related Stories: