நடிகை மாளவிகா மோகனன் காயம்

சென்னை: ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை மாளவிகா மோகனன், தற்போது தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து இந்தியில் ‘யுத்ரா’ என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக் காட்சியில் பங்கேற்று நடித்த மாளவிகா மோகனனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர், ‘நீங்கள் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும்போது, ​​ஒருகட்டத்தில் காயங்கள் சிறிய கீறல்கள் போல் உணர ஆரம்பிக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More