சொல்லிட்டாங்க...

யோகா அனைவருக்கும் சொந்தமானது. மதங்களை கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் யோகாவை பயிற்சி செய்து வருகின்றனர்.   :- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நான் இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. பிரதமர் பதவி அதிகாரத்துக்காக இல்லை. சேவைக்காக தான்.    :- பிரதமர் மோடி

130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் வளர்ச்சியை அனைவருக்கும் எடுத்து  செல்வதும், அனைவரையும் வளர்ச்சியில் பங்கெடுக்க வைப்பதும் மிகவும் கடினமான  பணி.    :- உள்துறை அமைச்சர் அமித்ஷா

விவசாயிகள் வேளாண் சட்டங்கள் வேண்டாம் என்றபோது காதில் வாங்காத பாஜ அரசு, இடைத்தேர்தல் தோல்வியால் சட்டங்களை திரும்ப பெற்றது சந்தர்ப்பவாதம்.    :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories:

More