யோகா அனைவருக்கும் சொந்தமானது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

ஹரித்வார்: யோகா குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது கிடையாது,  அனைவருக்கும் சொந்தமானது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.  உத்தரகாண்டில் பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.  பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டு  இருந்த புதிய கட்டிடத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மாநில ஆளுனர் குர்மீத் சிங், முதுல்வர் புஷ்கர் சிங் தாமி, உயர்கல்வி துறை அமைச்சர் தான் சிங் ராவத், பதஞ்சலி பல்கலைக்கழக வேந்தர் ராம்தேவ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘யோகா அனைவருக்கும் சொந்தமானது, அனைவருக்கும் பொருந்தக்கூடியது. நமது மனதையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு முறையாகும். பிராணாயாமத்தின் மிகச்சிறந்த வடிவமான அனுலோம்-விலோம்  மூச்சுப்பயிற்சியை ரயில்வே நிலையத்தில் காத்திருப்பு அறை மற்றும் விமான நிலையங்களில் காத்திருப்பு அறையின்போது செய்யலாம். மதங்களை கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் யோகாவை பயிற்சி செய்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories: