அத்தியாவசிய தேவைகளுக்கு இலவச தொலைபேசி எண்கள்: தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் தெரு விளக்கு வசதி, குப்பைகள் அகற்றுதல், கழிப்பிட வசதிகள், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் ஆகிய பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களை எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் செல்போன் எண்,  வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை தாம்பரம் மாநகராட்சி சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை, கட்டணமில்லா தொலைபேசி எண் -  1800 425 4355, மின்னஞ்சல் - tambaramcorpgrievance@gmail.com,  வாட்ஸ்அப் எண் - 8438353355 ஆகியவை மூலம் தெரிவிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: