வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சேப்பாக்கம் திமுக பகுதி செயலாளர் மதன் மோகன் ஏற்பாட்டில், சிந்தாதிரிப்பேட்டை மார்கெட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.  இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர், ரூ.15 லட்சம் செலவில் தையல் மெஷின்கள், ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செல்போன்கள், லேப்டாப்கள், மிதிவண்டிகள், மிக்சிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

தொடர்ந்து, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 300 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் அத்தியாவசிய பொருட்களுடன் ரூ.500 உதவித்தொகை வழங்கினர். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோ ஒட்டுனருக்கு ஒரு புதிய ஆட்டோ வழங்கினர்.

பின்னர், வில்லிவாக்கம், சிட்கோ நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலா ஏற்பாட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். தொடர்ந்து, செல்வி நகர் 70 அடி சாலையில் உள்ள வடிகால் மற்றும் குமரன் நகரில் உள்ள வடிகால் ஆகியவற்றை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories: