ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ஜியோ பிரீபெய்டு கட்டணங்கள் உயர்வு

மும்பை: ஏர்டெல், வோடபோன்-ஐடியாவை தொடர்ந்து, ஜியோவும் பிரீபெய்டு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இதன்படி, குறைந்த பட்ச ரீசார்ஜான 28 நாட்களுக்கான பேக்கேஜ் ரூ.75ல் இருந்து ரூ.91ஆக அதிகரிக்கப்படுகிறது. இதுபோல் 28 நாட்களுக்கான மாதம் 2ஜிபி, அளவற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் பேக்கேஜ் ரூ.129ல் இருந்து ரூ.155 ஆகவும், தினமும் 1.5 ஜிபி, அளவற்ற அழைப்பு பேக்கேஜ் ரூ.199ல் இருந்து ரூ.239 ஆகவும், தினமும் 2 ஜிபி, அளவற்ற அழைப்பு பேக்கேஜ் ரூ.ரூ.249ல் இருந்து ரூ.299 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், 56 நாட்களுக்கான தினமும் 1.5 ஜிபி, அளவற்ற அழைப்பு பேக்கேஜ் ரூ.399ல் இருந்து ரூ.479, தினமும் 2 ஜிபி பேக்கேஜ் ரூ.444ல் இருந்து ரூ.533 ஆகவும், உயர்த்தப்படுகிறது. 84 நாட்களுக்கான 6 ஜிபி, அளவற்ற அழைப்புகள் பேக்கேஜ் ரூ.329ல் இருந்து ரூ.395 ஆகவும், தினமும் அளவற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கொண்ட 1.5 ஜிபி பேக்கேஜ் ரூ.555ல் இருந்து ரூ.666 ஆகவும், 2 ஜிபி பேக்கேஜ் ரூ.599ல் இருந்து ரூ.719 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ஓராண்டு பேக்கேஜ்களான ஆண்டுக்கு 24 ஜிபி, அளவற்ற அழைப்புகள் பேக்கேஜ் ரூ.1,299ல் இருந்து ரூ.1,599 ஆகவும், அளவற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி பேக்கேஜ் ரூ.2,399ல் இருந்து ரூ.2,879 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இது டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: