கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.29) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது?

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் விவசாயமும் கடுமையான சேதத்தை சந்தித்துள்து. இதனிடையே நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மின கனமழை பெய்தது. இன்றும் பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனிடையே தமிழ்நாட்டில் நாளை காலை 8.30 மணி வரை 6 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர், மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது வரை 16 மாவட்டங்களில் நாளை (29-11-2021)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது; சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டார். கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) 8-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சூழ்நிலைகளை பொறுத்து தலைமை ஆசிரியர் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: