×

ஊட்டி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலி: வீடியோ வைரல்

ஊட்டி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட பின் வனப்பகுதிக்கு சென்று மறைந்த புலியின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வன கோட்டத்தில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையானது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு குழாம் உள்ளது. இந்த அணை கரைகளில் அவ்வப்போது மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் அருந்தி செல்வதை காண முடியும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பைக்காரா அணையில் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அணையின் கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டு கொண்டிருந்தது. படகு அருகில் வருவதை பார்த்த உடன் நீரில் இருந்து கரைக்கு சென்ற புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Feeder Baikara Dam , Tiger bathing enthusiastically at Ooty Bikara Dam: Video goes viral
× RELATED பரமக்குடியில் சேதமடைந்த தரைப்பாலம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை