×

பாஜக எம்பிக்கு 3வது முறையாக கொலை மிரட்டல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இணைந்து கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

ஏற்கனவே இவர் மீது தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக கவுதம் கம்பீருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இ-மெயில்கள் வந்துள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.Tags : BJP MP , 3rd time death threat to BJP MP
× RELATED எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க...