நோயாளிக்கு வாங்கிச்சென்ற பார்சல் இட்லியில் தவளை: ஓட்டலை மூடிவிட்டு உரிமையாளர் எஸ்கேப்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், நேற்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கும்பகோணம் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசனுக்கு, இவரது உறவினர் இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். மருத்துவமனையில், இட்லி பார்சலை முருகேசன் பிரித்து சாப்பிட முயன்றபோது ஒரு இட்லிக்குள் தவளை இறந்து கிடந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக தவளை கிடந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்று, உரிமையாளரிடம் புகார் செய்தனர்.

இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர், அவர்கள் வாங்கிச் சென்ற இட்லிக்கு உரிய பணத்தை கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை அவர்களின் கண்முன்னே கீழே கொட்டினார். பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஓட்டலை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Stories:

More