40 ஆண்டுகளுக்கு பின்பு மறுகால் பாயும் உலகாணி கண்மாய்

திருமங்கலம்: தொடர் மழையால் 40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெரிய உலகாணி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. திருமங்கலம் அருகேயுள்ள உலகாணி கிராமத்தில் அமைந்துள்ள பெரியகண்மாய் கள்ளிக்குடி தாலுகாவில் பெரிய கண்மாயாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்பு சமீபத்திய தொடர் மழையால் நிரம்பி நேற்று முதல் மறுகால் பாயத்துவங்கியுள்ளது. மறுகால் பாயும் தண்ணீர் அருகேயுள்ள கல்லணை கண்மாய் மற்றும் கூடக்கோவில் கண்மாய்க்கு செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய பெரிய உலகாணி கண்மாயின் தங்களது பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மற்றும் விவசாயம் செழிக்கும் என கிராமமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை வில்லூர் மற்றும் விடத்தகுளம் கண்மாய்கள் நிரம்பின. திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருவாரியான கண்மாய்கள், நிரம்பத்துவங்கியது. திருமங்கலம் அருகேயுள்ள விடத்தகுளம் பெரிய கண்மாய் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி மறுகால் பாய்ந்தோடியது. இதனால் விடத்தகுளம், விரிசங்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல் தாலுகாவின் கடைகோடியில் உள்ள பொக்கம்பட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. உரப்பனூர் அருகேயுள்ள பாப்பான்குளம் கண்மாயும் நிரம்பி மறுகால் பாய்கிறது. பொன்னமங்கலம் கண்மாய் இரண்டாம் முறையாக மீண்டும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.

வில்லூரினையொட்டி குன்னத்தூர், பாப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் பெய்த மழையால் ஓடை பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து வில்லூர் கண்மாயை அடையவே ஒரே நாளில் இந்த கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மறுகால்பாயும் தண்ணீர் அடுத்துள்ள ஆவல்சூரன்பட்டி, உன்னிபட்டி உள்ளிட்ட கிராமங்களை தாண்டி மாவட்டம் விட்டு பக்கத்து மாவட்டமான விருதுநகர் பகுதிக்கு சென்றடையும் முன்னதாக கண்மாய் நிரம்பி உடையும் அபாய நிலையில் ஊராட்சிதலைவர் கண்பதி, செயலாளர் சேகர் ஆகியோர் மறுகால் மடையை திறந்துவிட்டனர்.

Related Stories: