வத்திராயிருப்பு அருகே பாலம் உடனே கட்ட விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியிலிருந்து தலமலையான் கோயில் வரை செல்லக்கூடிய பாதையில் தார்ச்சாலை இல்லாமல் இருந்து வருகிறது. தம்பிபட்டியிலிருந்து இந்த சாலை வழியாக செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சியில் மலையில் கடந்த சில 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக செட்டிகுறிச்சி கண்மாய்க்கு செல்லக்கூடிய ஓடையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்றது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயப்பணி நடந்து வருகிறது. ஓடையில் அதிக தண்ணீர் சென்றதால் இந்த வயல்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

தண்ணீர் குறைந்த பின்பு ஓடையை கடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த ஓடையில் பாலம் மற்றும் சாலையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் மழை பெய்யும் காலங்களில் மக்கள் அவதிப்பட வேண்டிய நிலைய தொடருகிறது. இதனால் தம்பிபட்டியிலிருந்து செல்லக்கூடிய இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றவும், இந்த ஓடையில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: