தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை: தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு பகுதிகள் தொடர் மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் 1000 மிமி அளவு மழை பதிவாகியுள்ளது.மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு,உருவான பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை தொடரும் என்றும்,நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More