அறநிலையத்துறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக இணையவழியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை எடுத்துள்ளார். முதற்கட்டமாக  இணையவழி கல்நதாய்வு வழியாக ஆய்வர் பணி மாறுதல் மற்றும் ஆய்வர் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. நாளை காலை 11 மணி முதல் 12 மணி வரை பணி மாறுதல் கலந்தாய்வும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதே போன்று செயல் அலுவலர்களுக்கு இணையவழி கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயல் அலுவலர்கள் ஆணையர் குமரகுருபரனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More