போயஸ் இல்ல சாவியை ஒப்படைக்கக்கோரி சென்னை கலெக்டரிடம் தீபா, தீபக் மனு

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வேதா நிலைய இல்லத்தின் சாவியை 3 வாரங்களில் மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா மற்றும் தீபக் ஆகியோர் நேற்று மனு அளித்தனர். இம்மனுவுடன், ஐகோர்ட் தீர்ப்பின் நகலை இணைத்து, வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கக்கோரி இருவரும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Related Stories: