ஜி.கே.மணி அறிவிப்பு பாமகவினர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நாளை (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியான மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வர். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: