44வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து: தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

 திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 44வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது உச்சி முகர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவர் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திரு உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் தா.மோ.அன்பசரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், ஆர்.காந்தி, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், சி.வெ.கணேசன், சிவசங்கரன், மெய்யநாதன், மதிவேந்தன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் க.சுந்தர் எம்எல்ஏ, மயிலை த.வேலு எம்எல்ஏ, இளைய அருணா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, இ.கருணாநிதி, ஆர்.டி.சேகர், கே.பி.சங்கர், சி.வி.எம்.எழிலரசன், எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன், கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன், வட்ட பொருளாளர் அ.கதிரேசன், அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, வாலாஜாபாத் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாறன், ராமாபுரம் ராஜேஷ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தலைவர் கு.தியாகராஜன், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் கைலாசபுரம் பகுதியில் திமுக கட்சியை கொடியை ஏற்றி வைத்தார். உதயநிதிக்கு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு, பேனர் வேண்டாம். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் நல உதவிகளை வழங்கினர். மாணவ-மாணவிகள், ஏழை, எளிய மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Stories: