ஆங்கில படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்கிறார் சமந்தா

சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, பல புதிய படங்களிலும், வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், முதல்முறையாக அவர் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கிறார். இதை பிலிப் ஜான் இயக்குகிறார். 2004ல் டை மெரி  என்.முராரி எழுதிய ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் ஒரு படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார். இதில் அனு என்ற இருபாலின சர்ச்சைக்குரிய தமிழ் பெண் வேடத்தில் சமந்தா நடிக்கிறார். பெப்டா விருது பெற்றுள்ள பிலிப் ஜான், உலகம் முழுவதும் பிரபலமான ‘டவுன்டன் அபே’ என்ற டி.வி தொடரை இயக்கியவர். அவருடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, 2009ல் ‘இ மாய சேஷவ்’ என்ற படத்துக்காக ஆடிஷனில் கலந்துகொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதற்றத்தை இப்படத்தின் ஆடிஷனின்போது சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

Related Stories: