போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா

சென்னை: தென்னிந்திய படவுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு கேரளாவில் சொந்த வீடும், தோட்டமும் இருக்கிறது. ஐதராபாத் மற்றும் சென்னையில் சாலிகிராமம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்த வீடுகள் இருக்கிறது. தற்போது அவர் எழும்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு இந்த வீட்டில் நயன்தாரா குடியேற திட்டமிட்டுள்ளாராம்.

Related Stories:

More