×

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் வாலிபருக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை: கேரள நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து அவரை கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு, நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ குமார் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில், இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். பின்னர், அவரை திருமணம் செய்ய சைஷூ குமார் மறுத்துள்ளார்.இது தொடர்பாக ஆரியநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஷைஜூ குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நெடுமாங்காடு அதிவிரைவு சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷைஜூ குமாருக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tags : Kerala , Kerala court sentences teen to 15 years in prison for flirting
× RELATED கேரளாவில் தாயும், மகனும் அரசு தேர்வில்...