27 பேரை போலீசார் கொன்றதால் ஆத்திரம் தண்டவாளத்தை தகர்த்து ரயிலை கவிழ்த்த நக்சல்கள்: 6 மாநிலங்களில் உஷார்நிலை

திருமலை: தங்கள் இயக்கத்தை் சேர்ந்த 27 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டு கொன்றதால் ஆத்திரமடைந்த நக்சல்கள், தண்டவாளத்தை சேதப்படுத்தி சரக்கு ரயிலை கவிழ்த்தனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கடந்த 13ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். இதனை எதிர்பாராத  நக்சல்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர். இதில்   27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த நக்சல்கள், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பந்த் அறிவித்தனர். மேலும், சட்டீஸ்கர் பகுதியை சேர்ந்த நக்சல்கள், சட்டீஸ்கர்- ஆந்திரா எல்லையில் உள்ள தண்டேவாடாவில் உள்ள ரயில் பாதையை சேதப்படுத்தினர். அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் நேற்று தடம் புரண்டது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பந்த் அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories:

More