11 சிறப்பு முகாமில் 16.72 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  இதுவரை நடத்தப்பட்ட 11 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16,72,673  கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன். தொடர்ந்து இன்று 200 வார்டுகளிலும் 1600 முகாம்களுடன் 12வது கோவிட் மெகா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 9,60,465 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  நடைபெற உள்ள தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணைதடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More