×

காஸ் கசிந்து விபத்து வீடு இடிந்து 3 பேர் படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரி வசந்தம் நகரை சேர்ந்தவர் சுரேஷ். உழவர்கரை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. சுரேஷின் பாஜ அலுவலகமும் இந்த கட்டிடத்தில் உள்ளது இதன் கீழ்தளத்தில் அவரது உறவினரான எழிலரசி (43), கடந்த 10 ஆண்டாக கணவரை பிரிந்து மகளுடன் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் அவரது வீட்டின் முன்புற அறை,  பாஜ அலுவலக சுவர்கள் பயங்கர வெடி சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது. சிலிண்டர் அல்லது பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய எழிலரசி மற்றும் அவரது மகள், காய்கறி வியாபாரி ஜோதி ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


Tags : Cass , Gas leaks, house collapses, 3 injured
× RELATED காஸ் ஏஜென்சி ஊழியர் போல் நடித்து முதியவரிடம் ரூ.9,600 அபேஸ்: பெண்ணுக்கு வலை