×

புழல் சர்வீஸ் சாலையில் தடுப்புச் சுவர் இடிந்தது

புழல்: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த சாலையில், புழல் அருகே கதிர்வேடு பகுதியில் அம்பத்தூர் செல்லும் வாகனங்களுக்கான சர்வீஸ் சாலை உள்ளது. இந்த பகுதியில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருவதால், கதிர்வேடு பகுதி சர்வீஸ் சாலையின் தடுப்புச் சுவர் நேற்று பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. தகவலறிந்து புழல் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைத்தனர். பின்னர், இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பைபாஸ் சாலை மேம்பாலத்தில் புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் செல்ல, சர்வீஸ் சாலைக்கு வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

Tags : The retaining wall collapsed on the Pulhal Service Road
× RELATED ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்