×

திருத்தணி நகராட்சி ஆணையர் மாற்றம்

திருத்தணி: திருத்தணி நகராட்சி ஆணையராக ப்ரீத்தி பணியாற்றினார். இந்நிலையில், விரைவில் நகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் நேற்று ஆணையர் ப்ரீத்தி வந்தவாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வந்தவாசி நகராட்சி ஆணையர் ராமஜெயம் திருத்தணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆணையர் ப்ரீத்திக்கு அத்திமாஞ்சேரிபேட்டை சொந்த ஊர் என்பதால் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

Tags : Thiruvananthapuram , Change of Municipal Commissioner of Thiruvananthapuram
× RELATED திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு...