பெங்களூருவில் பரபரப்பு தெ.ஆப்ரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று?

பெங்களூரு: தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் புதிதாக பரவியுள்ள ‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவுவதை தடுக்க அனைத்து மாநில அரசு களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, தென் ஆப்ரிக்கா உட்பட இந்த வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 14 மாநாடு களில் இருந்து இந்தியா வந்துள்ள வர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து கடந்த 26ம் தேதி வரையில் 95 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பெங்களூருவில் தங்கியிருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது, ‘ஓமிக்ரான்’ தொற்றாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் 2 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இவர்களை தாக்கி இருப்பது ஓமிக்ரான் வைரசா என அறிய, அடுத்தக்கட்ட பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: