உ.பி அரசியலில் வீழ்ச்சியை சந்தித்து வரும் பகுஜன் சமாஜ்; 6 மாதத்தில் 15 எம்எல்ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு ஓட்டம்: 3வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு போனது எப்படி?

லக்னோ: உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களில் 15 எம்எல்ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு கடந்த 6 மாதத்தில் சென்றுவிட்டனர். அதனால் அக்கட்சியின் பலம் 3வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு சென்றுவிட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆளும் பாஜகவுக்கு எதிராக பிரசாரங்களை தொடங்கி உள்ளனர்.

இவர்களில் அகிலேஷ் யாதவ் தலைமையில் கூட்டணி அமைக்க ஆம்ஆத்மி கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக பிரியங்கா காந்தி அறிவித்துவிட்டார். மாயாவதியுடன் சில கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளது. ஆனால், இன்றைய நிலையில் பாஜகவுக்கு சவால்விடும் வகையில் சமாஜ்வாதி கட்சி தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதால், இம்முறை அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 19 பேர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர். ஆனால், இன்றைய நிலையில் வெறும் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே கட்சியில் எஞ்சியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள்  அக்கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில்  இணைந்தனர். தற்போது மேலும் 2 எம்எல்ஏக்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து  விலகியுள்ளனர். அவர்களில் எம்எல்ஏ வந்தனா சிங் பாஜகவில் இணைந்துள்ளார்.  மற்றொருவரான எம்எல்ஏ ஆலம்  என்பவர் எந்த கட்சிக்கு செல்கிறார் என்பதை  இன்னும் தெளிவுபடுத்தவில்லை. கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதங்களில் பகுஜன்  சமாஜ் கட்சியில் இருந்து கடந்த முறை நடந்த பேரவை தேர்தல் முடிவில் பாஜக 312 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், அப்னா தளம் 9 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், சுகல்தேவ் பாரதீய ஜனதா கட்சி 4 இடங்களிலும் ெவற்றிப் பெற்றன.

இந்த கட்சிகளில் காங்கிரசில் இருந்து ஒரு எம்எல்ஏ விலகியதால் அக்கட்சியின் பலம் 6 ஆக சரிந்துவிட்டது. மூன்றாவது இடத்தில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி தற்போது ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆறு மாதங்களில் 15 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக, சமாஜ்வாதி போன்ற கட்சிகளில் இணைந்துள்ளனர். இன்றைய நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பலம் 4 ஆக சரிந்துவிட்டது. அப்னா தளம் கட்சியின் பலமும், பகுஜன் சமாஜ் கட்சியின் பலமும் ஒரே அளவில் உள்ளன.

மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி பகுஜன் சமாஜ் கட்சி, தற்போது அப்னா தளத்தை காட்டிலும் சிறிய கட்சியாக மாறிவிட்டது. ஏற்கனவே கடந்த 2017ல் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பகுஜன் சமாஜ் கட்சியின் 8 மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இவ்வாறாக கடந்த தேர்தலில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சரிவை நோக்கி சென்ற நிலையில், இந்த தேர்தலில் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. 

Related Stories: