டேக் டைவர்ஷன்... சென்னையில் மழைநீர் தேங்கியதால் தடை விதிக்கப்பட்ட சுரங்கபாதைகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!!

சென்னை : சென்னையில் மழைநீர் தேங்கியதால் தடை விதிக்கப்பட்ட சுரங்கபாதைகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது. ஆவடியில் அதிகபட்சமாக 20 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மாமல்லபுரத்தில் 18 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கோயம்பேடு, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், தாம்பரம் , பூந்தமல்லி, கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் என மாநகரம் முழுவதும், புறநகர்ப் பகுதிகளிலும் அவ்வப்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் மாறியது.

இந்த நிலையில், சென்னையில் கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 அடி வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இன்னும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More