நீட் மசோதாவுக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நீட் மசோதாவுக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு விலக்க கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். நீட் மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றுத்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற கடந்த செப்டம்பர் 13ல் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories:

More