அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு; தத்தளிக்கும் செங்கல்பட்டு: சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: தமிழ்நாட்டி அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரியில் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெருமழையால் 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பாதிப்பை போல் செங்கல்பட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் கனமழையால் குண்டூர் ஏரி நிரம்பி தெருக்களில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர். வெள்ளத்தால் 2 கார்கள், ஒரு பைக் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு கார் மீட்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2 சுரங்கப்பாதைகள் மூடல்:

சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கியதால் 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் மற்றும் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுதத்ம் செய்யப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலை. வளசரவாக்கம் மேகா மார்ட் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காமாட்சி மருத்துவமனை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாணிமஹால் - பென்ஸ் பார்க் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஹபிபுல்லா, ராகவையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: