×

எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் இணைய சேவைக்கு இந்தியர்கள் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் : ஒன்றிய அரசு அறிவிப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் சேவைக்கு இந்தியா அனுமதி பெறாததால் அதன் செயற்கை கோள் வழி  இணையதள சேவைக்கு யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் என ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

1600க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை கொண்டு 21 நாடுகளில் நேரடி இணைய சேவை வழங்கி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் தனது சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விளம்பர பணிகளிலும் அந்த நிறுவனம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியாவில் உரிமை பெறாததால் அதற்கு ஒன்றிய அரசு, இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதனால் யாரும் ஸ்டார் லிங்க் இணைய சேவைக்கு யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள ஒன்றிய அரசு, உரிய அனுமதியை பெறுமாறும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.


Tags : Indians ,Elon Musk ,Star Link , ஸ்டார் லிங்க்
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...