பல்லாவரம் வாரச்சந்தை மூடல்

பல்லாவரம்:  தொடர் மழை காரணமாக 3வது வாரமாக பல்லாவரம் வார சந்தை நேற்றும் திறக்கவில்லை. இதுகுறித்து பல்லாவரம் கன்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் முறைப்படி எந்த அறிவிப்பும் வெளியிடாததால், நேற்று சுமார் 50க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் சந்தையில் விற்பனை செய்வதற்காக வந்தனர்.  அவர்கள், சந்தை நடைபெறும் நாட்களில் வழக்கமாக கடை போடும் இடத்தில், தாங்கள் கையோடு விற்பனைக்காக கொண்டு வந்திருந்த,  காய்கறி மற்றும் பழங்களை அடுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பொருட்கள் இல்லாமல் சந்தையே வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பழம் மற்றும் காய்கறிகளை விற்க வந்த வியாபாரிகள் பொருட்களை விற்க முடியாமல்  சாலையோரங்களில் வீசிச்சென்றனர்.

Related Stories:

More