சென்னை மாநகராட்சியில் நவம்பரில் 16 பேருக்கு டெங்கு: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: டெங்கு காய்ச்சலை தடுக்கவும், தேங்கும் மழை நீரால் ஏற்படும் தொற்று நோய் தாக்கத்திலிருந்து மக்களை காக்கவும், மலேரியா தடுப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீரின் தரம் கண்காணிக்கப்படுவதுடன், கொசு மருந்து, பிளீச்சிங்பவுடர் தெளித்தல், குளோரின் மாத்திரை வழங்குதல் போன்ற தடுப்பு நடவடிக்கைககள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் நல்ல நீரில் வளரும் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 2,410 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இதுவரை 4,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் மட்டும் 800க்கும் மேல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உடல் உபாதைகள் சென்னையில் அக்டோபர்  மாதத்தில் மட்டும் 219 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி மலேரியா தடுப்பு பணியாளர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் நவம்பர் மாதம்  நேற்று வரை மிகக்குறைவான  எண்ணிக்கையிலேயே டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அதாவது கடந்த மாதம் 219 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் வரை 16 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநகராட்சி  அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வரை கட்டுக்குள் உள்ளது

மாநகராட்சி மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மற்றும் அதன் லாவாக்கள் தற்போது பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் அழிந்து போயிருக்கக் கூடும். அதன் பயனாக ஏடிஸ் கொசுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகள் வீடுகளில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாயப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் கொசு மருந்து தெளிப்பு மற்றும் புகை போடப்படுகிறது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பிளீச்சிங் பவுடர் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சென்னையில் தற்போது வரை டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது, என்றனர்.

Related Stories: