ஆன்லைன் ஆட்டோக்களுக்கு 5% ஜிஎஸ்டி

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் பெறும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க இருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை நவம்பர் 18ம் தேதியிடப்பட்ட கடிதத்தில், `இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு திரும்ப பெறப்படுகிறது.  

தற்போதைய சந்தையில் இணையதள தொழில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1, 2022 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆப்லைனிலோ அல்லது நேரிலோ சென்று ஆட்டோ சேவை பெறுவதற்கு இந்த விதி பொருந்தாது,’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால், 5 சதவீத ஜிஎஸ்டி வரி பயணிகளிடம் இருந்தே வசூலிக்கப்படும் என்பதால் அதன் கட்டணம் உயரும்.

Related Stories:

More