டெல்லியில் சோனியா, ராகுல் தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து டிசம்பர் 12ல் காங்கிரஸ் பேரணி

புதுடெல்லி:  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இந்த விலைவாசி உயர்வை கண்டித்தும், பணவீக்கத்தை எதிர்த்தும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் வரும் டிசம்பர் 12ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.

போராட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று விடுத்த அறிக்கையில், ‘மோடி அரசும், விலைவாசி உயர்வும் மக்கள் வாழ்வின் சாபமாகி விட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, தக்காளியின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.  எல்லாமே படிப்படியாக சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போகிறது,’ என கூறி உள்ளார்.

Related Stories:

More