மும்பை தீவிரவாத தாக்குதல்: பாக். தூதரை அழைத்து ஒன்றிய அரசு கண்டிப்பு

புதுடெல்லி: மும்பையில் கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2012, நவம்பர் 26ம் தேதி, தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலின் 13ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதற்காக இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து, மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: