20 நகரங்களில் செயல்படும் சீன நிறுவனங்களிடம் ரெய்டு: வருமான வரித்துறை அதிரடி

புதுடெல்லி: நாடு முழுவதும் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள 20 நகரங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ெடல்லி, மும்பை, அகமதாபாத், காந்தி நகர் உள்ளிட்ட 20 நகரங்களில் சீன நிறுவனத்தின் இந்திய கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரசாயனம், இயந்திர பாகங்கள், ஊசி வடிவமைக்கும் இயந்திரங்களை சப்ளை செய்து வந்தன. மேற்கண்ட நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்ததால் வருமான வரித்துறை நேற்று அதிரடியாக ரெய்டு நடத்தியது.

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்தியாவில் செயல்பட்டு வரும் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் 20 நகரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கண்ட நிறுவனங்கள் ஆன்லைன் நெட்வொர்க் மூலம் ரூ20 கோடியை சீனாவுக்கு அனுப்பி உள்ளது. இதற்கான வரியை செலுத்தவில்லை.

மும்பையைச் சேர்ந்த தொழில்முறை நிறுவனமானது, அதன் ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மூலம் நிதி பரிமாற்றத்தை செய்துள்ளது. ரசாயன பொருட்களை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ரூ56 கோடி அளவிற்கு வாங்கி உள்ளனர். மார்ஷல் தீவுகளை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு நிறுவனம், தனது வரியை இங்கு செலுத்தாமல் சட்டவிரோத கொள்முதல் பில்களை தயாரித்து பொருட்களை வாங்கியுள்ளது. மொத்தம் ரூ28 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது. ரெய்டு நடத்திய போது கணக்கில் வராத ரூ66 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: