புழல் சிறை மின் பெட்டியில் பதுக்கிய செல்போன் பறிமுதல்

புழல்: சென்னை புழல் தண்டனை சிறையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், புழல் சிறையின் அனைத்து பிளாக்குகளிலும் நேற்று போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், ஒரு மின்பெட்டியில் பதுக்கி வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ஒரு கொலை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரும்பாக்கத்தை சேர்ந்த ராதா (எ) ராதாகிருஷ்ணன் (37) என்ற கைதியின் செல்போன் எனத் தெரியவந்தது. இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி ராதாகிருஷ்ணனிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

More