வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு சாலைகளில் நீர் தேக்கம்; சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்.!

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் நிலவரங்கள் மாற்றப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சமீப காலமாக கனமழை பெய்து அவரும் நிலையில், பல மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அந்த வகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் நிலவரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

நீர் தேங்கியுள்ள சாலைகளின் விவரம்;

* ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

* கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

* வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

* வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்ட வழித்தடங்கள்;

* சென்னை பெருநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

* கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.

* வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

*வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

Related Stories: