புதிய வகை கொரோனா பரவல் அச்சம் எதிரொலி!: வார இறுதிநாளில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி..!!

மும்பை: பங்குசந்தையில் வாரத்தின் இறுதி நாளான இன்று காலையில் வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்து 57,380 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 400 புள்ளிகள் 17,120 புள்ளிகளாக இருக்கின்றன. உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் பரவல் பங்குசந்தையிலும் எதிரொலித்தது. வங்கி, உலோகம், வாகனம், மருந்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் சரிவுடனே காணப்பட்டன.

இன்று காலையில் வர்த்தகம் தொடக்கத்தில் இருந்தே சரிவுடன் காணப்பட்டது. உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறி வருவதே வர்த்தகம் தொடர் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அச்சம் காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பதால் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவுடன் காணப்படுகிறது.

Related Stories: