இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தல்

கான்பூர்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடும் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. தற்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. மயாங்க் அகர்வால் 13, சுப்மன் கில் 52, புஜாரா 26, ரஹானே 35, ஜடேஜா 50 ரன்கள், சஹா 1 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 104, அஷ்வின் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Related Stories:

More