போதையில் மகளுக்கு டார்ச்சர் தந்தைக்கு சாகும் வரை ஆயுள்

மதுரை: குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது 13 வயது மகளுக்கு குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த 2015ல் வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். அதில், பாலியல் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

Related Stories:

More