மருந்து சப்ளை செய்ததற்கான ரூ.15 லட்சத்தை கேட்ட முதியவருக்கு கத்திக்குத்து: மெடிக்கல் கடைக்காரருக்கு வலை

கீழ்ப்பாக்கம்: புரசைவாக்கத்தை சேர்ந்த வினோத்குமார் சோமாரி என்பவர், கீழ்ப்பாக்கம் வெள்ளாள தெருவில், மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர், ஆதனூரை சேர்ந்த தமிழ்மணி (35) என்பவரிடம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம்  மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளை வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை 3 மாதமாகியும் தரவில்லை. இந்நிலையில், தமிழ்மணியின் தந்தை சதாசிவம் (65) நேற்று முன்தினம் பணத்தை வசூலிக்க புரசைவாக்கத்தில் உள்ள வினோத்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்த நகை, பணத்தை ஒரு வாலிபர் பறித்து சென்றார். புகாரின் பேரில், வினோத்குமார் சோமாரி உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More