விமானத்தில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த 2 பயணிகள் மீது, சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை சோதனையிட்டனர். அப்போது அவர்களின் உள்ளாடைகளுக்குள் 2 கிலோ தங்க பசை இருந்தது. இதன் மதிப்பு ரூ.85.5 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

More