சில்லி பாய்ண்ட்...

* டேபிள் டென்னிஸ் சத்யன் முன்னேற்றம்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் 4-0 என நேர் செட்களில் ரஷ்ய வீரர் விளாதிமிர் சிடோரென்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். அந்த சுற்றில் நைஜிரியா வீரர் குவாத்ரி அருணாவுடன் மோத உள்ளார்.

* தனியே... தன்னந்தனியே...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் முதல் டெஸ்ட் தொடங்கிய அதே நேரத்தில் கோஹ்லி நேற்று மும்பையில் தனியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அடுத்து 2வது டெஸ்ட் மும்பையில் டிச.3ம் தேதி தொடங்குகிறது.

* சாம்பியன் லீக் கால்பந்து மெஸ்ஸி, நெய்மர் இருந்தும் தோல்வி

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. இங்கிலாந்தில் நடந்த இந்த ஆட்டத்தில்  மான்செஸ்டர் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. உலகின் சூப்பர் ஸ்டார்களான மெஸ்ஸி(அர்ஜென்டீனா), நெய்மர்(பிரேசில்), எம்பாப்பே(பிரான்ஸ்) வீரர்கள் இருந்தும் பிஎஸ்ஜி அணி தோல்வியை தழுவியுள்ளது. எம்பாப்பே மட்டும் கோலடித்தார். மான்செஸ்டர் தரப்பில் ரகீம் ஸ்டெர்லிங்(இங்கிலாந்து), கேப்ரியல் ஜீசஸ்(பிரேசில்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். அதே நேரத்தில் ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள மான்செஸ்டர், பாரிஸ் அணிகள் அடுத்த ‘சுற்று -16’ வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

* காலிறுதி வாய்ப்பில் பிரான்ஸ்

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடக்கும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் நேற்று பி பிரிவில் உள்ள பிரான்ஸ்-போலாந்து அணிகள் மோதின. அதில் பிரான்ஸ் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. ஏற்கனவே இந்தியாவை வென்றுள்ளள பிரான்ஸ் காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. பிரான்ஸ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது.

* டிராவை நோக்கி இந்தியா ஏ

தென் ஆப்ரிக்காவின் புளோயம்போன்டீனில் நடக்கும் முதல் டெஸ்ட்(4நாள்) ஆட்டத்தில் 2வதுநாள் முடிவில் இந்தியா-ஏ ஒரு விக்கெட் இழப்புக்கு 106ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த கேப்டன் பிரியங் பாஞ்சால் 96 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இந்நிலையில் மழை காரணமாக நேற்று 67.2ஓவருடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா 2விக்கெட் இழப்புக்கு 237ரன் எடுத்திருந்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 80*, ஹனுமா விகாரி 4*ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று ஆட்டத்தின் கடைசிநாள் என்பதால் ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்பே அதிகம். ஏற்கனவே தெ.ஆப்ரிக்கா ஏ முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 509ரன் குவித்து டிக்ளேர் செய்து உள்ளது.

Related Stories: