×

தமிழகத்தில் ஆகஸ்ட்., செப்., அக். ஆகிய 3 மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களில் 84% பேர் தடுப்பூசி போடாதோர்!: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்களில் மிகச் சிலர்தான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருதவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள் 109 பேர் அதாவது 5 சதவீதம் பேர் ஆவர். இந்த 109 பேரில் பலர் இணை நோய் உள்ளவர்கள் என்றும் தாமதமாக சிகிச்சை பெற வந்தவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2,011 பேரில் 227 பேர் (11 சதவீதம்) ஒரே ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டிருந்ததும், இதேபோல் உயிரிழந்த 2,011 பேரில் 1,675 பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தடுப்பூசி போட்டு கொண்டவர்களைவிட போடாதவர்கள் தொற்றில் இறப்பது மூன்றரை மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே உயிரிழப்பை தவிர்க்க அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : TN , Corona, mortality, 84%, vaccinated
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.!